குட்பை ODI கிரிக்கெட்.. ஓய்வை அறிவித்து.. விடை பெற்றார் அதிரடி நாயகன் கிளன் மேக்ஸ்வெல்!

Jun 02, 2025,06:29 PM IST

சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் க்ளென் மேக்ஸ்வெல், 2026 டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 


கிளன் மேக்ஸ்வெல், 2012 முதல் 2025 வரை 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3990 ரன்கள் மற்றும் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார். காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய மேக்ஸ்வெல், உடல் ஒத்துழைக்காத காரணத்தால் ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.


க்ளென் மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் டி20 போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காகவும், பிக் பாஷ் லீக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.




2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் எடுத்தது அவரது சிறந்த இன்னிங்ஸாக கருதப்படுகிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா, மேக்ஸ்வெல்லின் முடிவை ஏற்றுக்கொண்டு, 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு இது உதவும் என்று தெரிவித்துள்ளது.


ஆஸ்திரேலியாவுக்காக சில போட்டிகளில் விளையாடுவதே பெருமையாக இருந்தது. அது போதும் என்று நினைத்தேன். பிறகு, அணியில் இருந்து நீக்கப்பட்டது, மீண்டும் கொண்டுவரப்பட்டது, சில உலகக் கோப்பைகளில் விளையாடியது மற்றும் சில சிறந்த அணிகளில் ஒரு பகுதியாக இருந்தது போன்ற ஏற்ற தாழ்வுகளை கடந்து வந்துள்ளேன் என்றார் மேக்ஸ்வெல்.


சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியதுதான் மேக்ஸ்வெல்லின் கடைசி ஒருநாள் போட்டி.  மேக்ஸ்வெல்லின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தேர்வுக்குழு தலைவருமான ஜார்ஜ் பெய்லி இதுகுறித்து் கூறுகையில், க்ளென் ஒருநாள் போட்டியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்படுவார். இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரது திறமை அபாரமானது. களத்தில் அவரது ஆற்றல், பந்துவீச்சில் குறைத்து மதிப்பிடப்பட்ட திறன் மற்றும் நீண்ட காலம் விளையாடியது சிறப்பானது. ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதில் அவரது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு தனித்து நிற்கிறது.


அதிர்ஷ்டவசமாக, டி20 போட்டிகளில் அவர் இன்னும் நிறைய பங்களிக்க முடியும். எல்லாம் நல்லபடியாக நடந்தால், அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு தயாராகும் போது அவர் முக்கிய வீரராக இருப்பார் என்றார்.  


மேக்ஸ்வெல்லின் ஓய்வு முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. அவரது அதிரடி ஆட்டத்தை இனி ஒருநாள் போட்டிகளில் பார்க்க முடியாது என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், டி20 போட்டிகளில் அவர் இன்னும் சிறப்பாக விளையாட வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணிக்காக பல சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார். அவரது ஓய்வு ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு இழப்பாக இருந்தாலும், டி20 போட்டிகளில் அவர் இன்னும் பல சாதனைகளை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்