சென்னை : விஜய் நடித்துள்ள கோட் படத்தின் நான்காவது சிங்கிள் பாடல் இன்று (ஆகஸ்ட் 31) மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த பாடலுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும், வ்யூஸ்களும் குவிந்து வருகிறது. விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள இந்த 4வது சிங்கிள் எப்படி இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க...
டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் கோட். பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் செப்டம்பர் 5 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. விஜய்யின் அரசியல் மாநாடு ஒரு புறம் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் வகையில் கோட் படத்தின் அப்டேட்களும் வெளியிடப்பட்டு வருகிறது.
இதுவரை வெளியிடப்பட்ட கோட் படத்தின் பாடல்கள், டிரைலர் என அனைத்தும் ரசிகர்களிடம் வேற லெவலில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் மட்ட பாடல் இன்று மாசாக வெளியிடப்பட்டுள்ளது. விஜய் படம்ன்னா பஞ்ச், மாஸ், டான்ஸ், ஆட்டம்...பாட்டம் இல்லாமலா? விஜய் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற படி மட்ட பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
யுவன் வழக்கம் போல் பட்டையை கிளப்பி உள்ளார். விவேக்கின் வரிகளையும் சொல்லவே வேண்டாம். விஜய்யின் நடனம், மாஸ் என அனைத்தும், பாடலை கேட்ட மாத்திரத்திலேயே எழுந்து ஆட வைக்கிறது. இது விஜய்யின் மாஸ் ஹிட் பாடல்களில் கண்டிப்பாக சேரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் வெங்கட் பிரபு இந்த பாடலை வேறு மாதிரி எடுத்திருக்கலாமோ என்ற மனக்குறை விஜய் ரசிகர்களிடம் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம், பாடலின் துவக்கத்திலேயே ஏற்பட்ட ஏமாற்றம் தான்.
கோட் 4வது சிங்கிள் வருகிறது என்றதும் விஜய் ரசிகர்கள் மிகந்த ஆர்வமாக இருந்தனர். ஆனால் இந்த பாடலில் காட்சிகளை பாக்கும் போதும் அப்படியே லியோ படத்தின், நான் ரெடி தான் வரவா என்ற பாடல் கண்டிப்பாக அனைவரின் நினைவிலும் வந்து போகிறது. லியோ பட பாடலில் வருவது போல் அதே ஒரு இருட்டு குடோன், நிறைய கூட்டம், அதற்கு நடுவில் விஜய் வந்த ஆடுவது என எல்லாம் அப்படியே உள்ளது. அதே போல் யுவனின் இசைக்கு ஏற்ற விறுவிறு ஆட்டம் விஜய்யிடம் இல்லையோ என்ற ஏக்கமும் சற்று வருகிறது. விஜய்யின் நடனத்தில் அந்த பழைய வேகம் இல்லையோ என்ற குறை, இந்த காட்சிகளை உற்றுப் பார்க்கும் போது வருகிறது.
பாடல், இசை, நடனம் என அனைத்தையும் மாஸாக செய்து விட்டு, காட்சிகளில் மட்டுமே ஏன் காப்பி அடித்தது போல் இப்படி செய்து விட்டாரே வெங்கட் பிரபு என்ற ஆதங்கம் விஜய் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், இந்த பாடல் விஜய் ரசிகர்களிடம் செமையான வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட கோட் பாடல்களிலேயே இது தான் மாஸ் என பெயர் வாங்கி உள்ளது. யுவன் மீண்டும் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இந்த பாட்டுக்காகவே படம் வேற லெவல் ஹிட் அடிக்கும் என சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
{{comments.comment}}