CM 2026.. கோட் படத்தில் இதுதான் விஜய் கார் நம்பர்.. ஆடிக்கிட்டே பிரேம்ஜி கொடுத்த சூப்பர் அப்டேட்!

Sep 02, 2024,03:14 PM IST

சென்னை: விஜய் நடித்த கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக தயாராக உள்ள நிலையில் இப்படத்தின் அசத்தலான அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அதை விட சூப்பரான மேட்டரை அவரது தம்பியும், நடிகருமான பிரேம்ஜி கொடுத்துள்ளார்.


வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோட் படத்தில் நடிகர் விஜய் தந்தை, மகன் என்ற இரண்டு வேடங்களில் நடித்து முடித்துள்ளார். இவருடன் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, வைபவ், அஜ்மல், அரவிந்த், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தியுள்ளனர்.




இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக தயாராக உள்ளன. தமிழக மற்றும் கேரளாவில் ஓப்பனிங் ஷோவை காண ரசிகர்கள் நான் நீ என போட்டா போட்டுக்கொண்டு இப்படத்திற்கான  டிக்கெட்டுகளை புக்கிங் செய்து வருகின்றனர். மேலும்  இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன்  எதிர்பார்த்து வரும் நிலையில் இப்படத்தை கொண்டாடவும் தயாராகி வருகின்றனர்.


ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், பரபரப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையே வெளியாக தயாராக இருக்கும் கோட் படத்தின் அடுத்தடுத்த ப்ரோமோஷனுக்காக இப்படத்தின் அப்டேட்டுகளை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரேம்ஜி, நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நிறைய உள்ளன. தமிழ் சினிமாவில் இதற்கு முன் எந்த படத்திலும் இது போன்ற ஆச்சரியங்களை பார்த்திருக்க மாட்டீர்கள். ஒவ்வொரு சீன்களுக்கும் விசில் அடிப்பீர்கள். நான் படத்தை நிறைய தடவை பார்த்து விட்டேன் என கூறியிருந்தார்.


சிஎம் 2026




அதேபோல இன்னொரு சூப்பரான மேட்டரையும் சொல்லியுள்ளார் பிரேம்ஜி. அதாவது அப்படத்தில் வரும் காரின் நம்பர் 2026 அதுவும் சாதாரண 2026 இல்லை, சிஎம் 2026. காருல நானும் தளபதியும் உட்கார்ந்திருப்போம் அப்படின்னு சொல்லி அவர் ஜாலியாக ஒரு ஆட்டமும் போட்டு குஷியைக் கிளப்பியுள்ளார்.


அதேபோல் இப்படத்தில் யுவன்சங்கர் ராஜா இசைக்கும் எதிர்பார்ப்பு வலுத்துவரும் நிலையில் படத்தின் முதல் மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து படத்தின் மட்ட என்ற நாலாவது சிங்கள்  நேற்று முன்தினம் வெளியானது. இப்பாடலும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்றதோடு படம் பிளாக்பஸ்டர் ஹிட் பெற்று வசூலில் சாதனை படைக்கும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


வேற வெர்ஷன் விசில் போடு




இந்த நிலையில் கோட் படத்தின் பாடல்கள் குறித்த ஒரு அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபுவுமம் வெளியிட்டுள்ளார். அதில் கோட் படத்தின் விசில் போடு என்ற பாட்டு தான் ஓபனிங் பாடல்.. ஆனால் நீங்கள் கேட்ட வெர்ஷன் படத்தில் இருக்காது. அந்தப் பாடலின் திருவிழாக்கோலமான மற்றொரு வெர்ஷன் தான் தியேட்டரில் நீங்க பார்க்கப் போறீங்க என்ற  அப்டேட் ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.


இதற்கிடையே நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் முதல் மாநாடு குறித்த ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்