GOAT.. பட்டையைக் கிளப்பும் கோட் டிரெய்லர்.. வேற லெவல் மேக்கிங் போல.. துள்ளலில் ரசிகர்கள்!

Aug 17, 2024,05:37 PM IST

சென்னை: GOAT படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் தி கோட். தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்  என்பது தான் தி கோட் படத்தின் பெயர் சுருக்கம். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, வைபவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான 3  பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன. 



இப்படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என 2 வேடத்தில் நடித்துள்ளாராம். தி கோட் படத்தின் அப்டேட்டுகளை மாறி மாறி படக்குழு வெளியிட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி படக்குழு தரப்பில் இருந்து புது போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம்ஜி, காளிதாஸ் வைபவ் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்திருந்தனர். இதன் பின்னர் இந்த படத்தின் ட்ரைலர் கடந்த 15ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகியது.

முன்னதாக படக்குழு தரப்பில் இருந்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ 26 நொடிகள் கொண்டதாக இருந்தது.  இது டிரெய்லர் அறிவிப்பு தொடர்பான வீடியோதான்.. பார்க்கவே படு மிரட்டலாக இருந்தது.. இதுவே இப்படி இருந்தால் டிரெய்லர் வேற லெவலில்தான் இருக்கும் என்பது கன்பர்ம் ஆனது. அதற்கேற்ப தற்போது ரசிகர்கள் டிரெய்லரை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். 

தி கோட் படத்தின் ஷூட்டிங்,டப்பிங் பணிகள் என அனைத்தும் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்