- ஸ்வர்ணலட்சுமி
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று".
இது அவ்வையார் நமக்கு கூறிய அருமையான பழமொழி ஆகும். இதன் பொருள் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது மிகவும் நல்லது என்பது ஆகும்.
"ஆலயம் "என்பதன் பொருள் கடவுள் உறையும் இடம் கோயிலை குறிக்கின்றது. இது அறியாமை அடக்கும் இடம்
என்று பொருள்படுகிறது. "ஆலயம்" என்பது' ஆ + லயம்' என பிரிக்கலாம் 'அ' என்பதற்கு 'ஆன்மா 'என்று பொருள்படுகிறது.'லயம்' என்பதற்கு லயமாவதற்கு அதாவது சேர்வதற்குரிய இடம் என்றும் பொருள்படுகிறது. எனவே இறைவன் திருவடியில் ஆன்மா லயிப்பதற்குரிய இடம் என்று பொருள்படுகிறது.
"தொழுவது "என்பது வணங்குவது, வழிபாடுகள் செய்வது.
"சாலவும் நன்று" என்பது மிகவும் நன்மை பயக்கக் கூடியது.மிகச் சிறப்புடையது என்பது ஆகும்.
இறைவன் அனைத்து இடங்களிலும் நீக்கமற இருந்தாலும் நாம் ஆலயங்களை புனிதத் தல மாக கருதி அங்கு சென்று வழிபடுவது வழக்கம்.
ஆலயம் சென்று வழிபடுவது ஆன்மீக வளர்ச்சிக்கும், நல்லறிவு பெறுவதற்கும்,மன அமைதிக்கும், குடும்ப வளர்ச்சிக்கும்,செல்வ செழிப்பான வாழ்விற்கும் மகிழ்ச்சியான வாழ்விற்கும்,நல்ல ஒழுக்கம் கடைப்பிடிக்க வழிவகுக்கும். உண்மையான பக்தியுடன் ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதனால் நல்லறிவும், நல்வாழ்வும் கிடைக்க பெறலாம்.
'கோயில்' என்றும் நாம் வழக்கத்தில் கூறுவது- 'கோ' என்றால் கடவுள் 'இல்'என்றால் தங்குமிடம். 'கோயில் 'என்பது கடவுள் தங்குமிடம் என்று பொருள் படுகிறது. ஆலய வழிபாட்டின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
நம் அன்றாட வாழ்வில் மன அழுத்தங்களை குறைத்து,நேர்மறை எண்ணங்களை வளர்த்து, இறைவனின் ஆசிகளை பெறக்கூடிய ஒரே இடம் ஆலயம். இறைவனின் திருத்தலமான ஆலயத்திற்கு சென்று இறைவனை நேரடியாக நாம் வணங்குவதனால் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
நாம் அன்றாடம் காலை எழுந்து குளித்து உடலை தூய்மை செய்து ஆலயத்திற்கு செல்வதனால் நம் மனம் தூய்மை அடைகிறது. ஆலயங்கள் சமூகத்தின் மையங்களாக திகழ்கின்றன.மக்கள் அனைவரும் ஒன்று கூடி நல்லிணக்கத்துடன் வாழ உதவும் ஒரே இடம் ஆலயம்.
நம் மனதில் உள்ள பிரச்சனைகளை, கவலைகளை இறைவனிடம் மனதார கூறி இறைவனின் அருளையும், ஆசீர்வாதங்களை பெரும் ஒரே இடம் ஆலயம் . எனவே ஆலயவழிபாடு என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல. ஆலயம் மனித வாழ்வின் ஆன்மீக மனம் மற்றும் சமூக நலங்களுக்காக ஒரு அத்தியாவசியமான இடமாகும். மன உறுதியை உண்டாக்கி இறைவனை வணங்கி மனதில் உள்ள குறைகளை அவனிடம் முறையிடுவதன் மூலம் மன நிம்மதி ஏற்படுகிறது.
ஆலய கோபுரத்தை தரிசிப்பது கோடி புண்ணியம் அளிக்கும். ஆலயத்திற்கு நுழைவதற்கு முன், கைகால்களை சுத்தம் செய்து,கொடி மரத்தையும் பலிபீடத்தையும் வணங்கி, இறைவன் கருவறையில் சென்று மனம் ஒன்றுபட்டு இறைவனிடம் முறையிட மனதெளிவும்,உயர்ந்த எண்ணங்கள் வளர வழி வகுக்கிறது. நம் ஆன்மா இறைவனுடன் இணையும் இடமாக அமைந்துள்ள ஆலயங்களுக்குச் சென்று அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக.
மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?
விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?
நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!
{{comments.comment}}