சென்னை: சென்னையில், நேற்று உயர்ந்திருந்த தங்கம் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் சவரனுக்கு இன்று ரூ.40 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் குறைந்தே உள்ளது.
கடந்த மே மாதம் ஒரு பவுன் ரூ.55.200க்கு விற்கப்பட்டது. இந்த புதிய உச்சம் அனைவருக்கு மிகுந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இது தங்கத்தின் வரலாற்றிலேயே புதிய உச்சமாகும். அதன் பிறகு தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி ஒரு பவுன் ரூ.53,440க்கு விற்கப்பட்டது.
13ம் தேதி ஒரு பவுன் ரூ.53,280க்கும், 14ம் தேதி ஒரு பவுன் ரூ.53.200 என விலை குறைந்து இருந்தது.இந்தநிலையில் கடந்த 15ம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. இவ்வாறாக தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,695 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.40 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,560 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,304 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,432 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை
நேற்று உயர்ந்திருந்த வெள்ளி இன்று குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.40 காசுகள் குறைந்து ரூ.96க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 761.60 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலைரூ.95,600 இருந்த விலை இன்று ரூ.96,000க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!
அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!
மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
{{comments.comment}}