சென்னை: பட்ஜெட் தாக்கத்தினால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் சரிந்து வருகிறது.
மத்திய பட்ஜெட்டின் எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்ததை அடுத்து தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 2200 குறைந்தது. நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இனி வரும் காலங்களிலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நேற்று, காலை ஒரு கிராம் தங்கம் ரூ.6810க்கு விற்கப்பட்டது.பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பால் நேற்று மாலை மீண்டும் தங்க விலை கிராமிற்கு ரூ.275 குறைந்து ரூ.6,550 க்கு விற்கப்பட்டது. நேற்றைய விலையை தொடர்ந்து தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.60 குறைந்து 6,490 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,920 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.64,900 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,49,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,080 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,640 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.70,800 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,08,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,495க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,086க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,510க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,101க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,745க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,358க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,495க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,086க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
சென்னையில் நேற்று காலை ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று 40 காசுகள் குறைந்து ரூ.95.60க்கு விற்கப்பட்டது. மத்திய பட்ஜெட் எதிரொலியாக நேற்று மாலை நேர நிலவரப்படி ரூ.3.50 காசுகள் குறைந்து ரூ.92.50க்கு விற்கப்பட்டது. அது இன்று மேலும் குறைந்துள்ளது.கிராமிற்கு 50 காசுகள் குறைந்து ரூ.92க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 736 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.920 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,200 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.92.000 ஆக உள்ளது.
ஆப்கானிஸ்தான் - இலங்கை இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு
மகளிர் சுதந்திர உலகப் பயணம்!
திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு 28, மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி
காஸ் ஆட்டோக்களுக்கு சிக்கல்.. காஸ் நிரப்ப நீண்ட க்யூவில் காத்திருப்பபு.. பயணிகளும் பாதிப்பு
நடிகை ஹன்சிகா மோத்வானி - சோஹைல் கதூரியா தம்பதி விவாகரத்து
தீயாய் பரவும் வதந்தி.. பெட்ரோல் பங்குகளில் குவிந்த மக்கள்.. பீதி தேவையில்லை என அரசு விளக்கம்
பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? - தமிழக அரசிற்கு விஜய் சரமாரி கேள்வி
யோசனை, சிந்தனை, ஒருமுகப்படுத்துதல் (செறிவு) & தியானம்
{{comments.comment}}