பட்ஜெட் 2024: தங்கம் வெள்ளி மீதான சுங்கவரி குறைப்பு.. நகை விலை கணிசமாக குறையும்..!

Jul 23, 2024,01:14 PM IST

டெல்லி:   2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.


2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 15.4 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாவும் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.




இந்தியர்கள் அதிக முதலீடு செய்வது தங்கம் தான். தங்கத்தின் அளவை வைத்து ஒருவரின் பொருளாதாரம் கணிக்கப்படுவதும் உண்டு. அத்தகைய நகைக்கு கடந்த  நிதியாண்டில் சுங்கவரி 15 சதவீதம் வதிக்கப்பட்டிருந்தது. இந்த வரி இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 6.5 சதவீதமமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால், இந்தியாவிற்கு கடத்தல் மூலம் நாட்டில் தங்கம் நுழைவதை தடுக்க முடியும். அத்துடன் கள்ளச்சந்தை வர்த்தகமும் கட்டுப்படுத்தப்படும். இதன் வாயிலாக அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும்.


கடந்த சில மாதங்களாக நிலையற்று இருந்து வருகிறது தங்கம் விலை. தங்கத்தின் விலை உயர்வு எப்போது இல்லாத அளவிற்கு உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் கவலை  அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கு சுங்கவரியை குறைந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. தங்கத்தின் மீதான வரி குறைப்பு நகைக்கடை வைத்திருப்பவர்களுக்கு நேரடி பலன் கிடைக்கும். அத்துடன் இந்த வரி குறைப்பால் நகை நகை விற்பனையும்  அதிகரிக்கும். 


சுங்க வரி குறைக்கப்படுவதால் தங்கம், வெள்ளி விலை குறைகிறது. தங்கம் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற உலோகம் என்பதால், வரி குறைப்பால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தங்கம் வெள்ளி மட்டுமின்றி தாமிரம் மற்றும் உருக்கு இறக்குமதி வரிகளும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.செல்போன் மற்றும் சார்ஜர்களுக்கு சுங்கவரி 15% குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் செல்போன்களின் விலையும் குறைகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்