Gold Rate.. சரிந்து வந்த தங்கம் இன்று உயர்ந்தது.. சவரனுக்கு ரூ. 80 அதிகரிப்பு!

Nov 15, 2024,12:35 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு இன்று ரூ.80 அதிகரித்துள்ளது. ஒரு கிராமின் விலை  ரூ.6,945க்கும், ஒரு சவரன் ரூ.55,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது.அதுவும் கடந்த 9ம் தேதியில் இருந்து சவரனுக்கு 2800 வரை குறைந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. 


கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை குறைந்த போது தங்கம் விலை குறைந்திருந்தது. அதன்பின்னர் குறைவது போல குறைந்து ஒரு வாரத்திலேயே மீண்டும் உயர்ந்து புதிய உச்சம் தொட்டது.அதே போன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து நகை விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. இதனால், நடுத்தர வர்க்கத்தினர் அடுத்து நகை விலை புதிய உச்சம் தொட்டு விடுமே என்று புலம்பி வருகின்றனர்.




சென்னையில் இன்றைய (15.11.24) தங்கம் விலை....


சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.80 அதிகரித்து ரூ.6,945க்கும், ஒரு சவரன் ரூ.55,560க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 55,560 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.69,450 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,94,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,576 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.60,608 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.75,760 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,57,600க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,576க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,960க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,591க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,576க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,576க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,576க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,576க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,581க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ. 6,817

மலேசியா - ரூ.6,940

ஓமன் - ரூ. 7,118

சவுதி ஆரேபியா - ரூ. 6,836

சிங்கப்பூர் - ரூ.6,968

அமெரிக்கா - ரூ. 6,925

துபாய் - ரூ.7,048

கனடா - ரூ.6,832

ஆஸ்திரேலியா - ரூ.6,646


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.99 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 792 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.990 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,900 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,000 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!

news

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

news

எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!

news

எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!

news

Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!

news

தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?

news

"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!

news

சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

news

காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்