சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ.400 உயர்ந்து ரூ.55,200 விற்கப்படுகிறது. தங்கத்தை போல வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தங்கம் விலை கடந்த சில மாதங்களாக அதிரடியாக உயர்ந்தும், புதிய உச்சத்தை தொட்டும் வருகிறது. தங்கத்தை போலவே வெள்ளியும் புதிய உச்சம் தொட்டுள்ளது.
இந்தியாவை பொருத்தவரை தமிழகத்தில் தங்கம் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். ஏனெனில், தமிழகத்தில் குழந்தை பிறப்பு முதல் தங்கத்தின் பயன்பாடு தொடங்கி, பல முக்கிய நிகழ்வுகளுக்கொல்லாம் தங்கம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தங்கத்தையும் தமிழக மக்களையும் பிரிக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தங்கத்துடன் மக்கள் ஒன்றியுள்ளனர். ஒருவரின் பொருளாதாரத்தை தரத்தை கணிப்பதற்கு தங்கம் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது.
அப்படிப்பட்ட தங்கம், சமீபகாலமாக விலை உச்சத்தை தொட்டு வருவது, பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த கவலையை அளித்து வருகிறது. சாதாரண மற்றும் நடுத்தர மக்களை தங்கம் விலை கடுமையாக பாதித்து வருகிறது. இந்த விலை உயர்வால் இந்த வைகாசியில் விஷேசங்கள் வைத்திருப்பவர்கள் மிகுந்த கவலை அடைந்து வருகின்றனர். தங்கம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு புதிய உச்சம் கண்டு வருவது தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு தான் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, நாட்டில் நிலவும் பொருளாதார நிலையற்ற நிலை காரணமாக மக்கள் தற்போது தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.இதுவே தங்கம் விலை உயர்விற்கு காரணமாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ தங்கம் தேவை குறையப்போவதும் இல்லை. அதனை வாக்குவோரும் நிறுத்தப்போவதும் இல்லை. ம்ம்ம்... சரி இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன என்பதை சற்று பார்ப்போம்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,900 ரூபாயாக உள்ளது. இது கடந்த சனியன்று விற்ற விலையில் இருந்து 80 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.400 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 55,200 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,528 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.60,224 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 ஆக உள்ளது.
இன்றைய வெள்ளி விலை...
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ரூ.4.50 காசுகள் உயர்ந்து ரூ.101 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.96,500 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 1,01,000க்கு விற்கப்படுகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}