சென்னை: கடந்த சில நாட்களாக புதிய வரலாற்று சாதனை படைத்த தங்கம் இன்று சற்று குறைந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இது வாடிக்கையாளர் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த மாதத்தின் கடைசியில் இருந்து புதிய உச்சத்தில் உயர்ந்து வந்தது. இந்த விலை ஏற்றத்தால் நகைப்பிரியர்கள் மிகுந்த கவலை அடைந்து வந்தனர்.இந்திய மக்கள் மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்கள் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவது தான் முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல நாட்களுக்கு பின்னர் இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நீடிக்குமா? அல்லது மீண்டும் நகை விலை அதிகரிக்குமா? என்று வாடிக்கையாளர்கள் புலம்பி வருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,780 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 25 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.200 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,240 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,396 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,168 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
இன்றைய வெள்ளியின் விலை குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 89 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 712 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,000 குறைந்து ரூ.89,000த்திற்கு விற்கப்படுகிறது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}