விடாமல் துரத்தும் விலை உயர்வு..  ஒரு சவரன் ரூ. 54,000த்தை நெருங்கியது தங்கம் விலை!

Apr 11, 2024,01:42 PM IST

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் விற்கப்படும் தங்கம் சவரனுக்கு ரூ.54000 க்கு நெருங்கி  வருகிறது. இந்த விலை ஏற்றம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது.இந்த விலை உயர்வு நகை வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றாவது குறையுமா? என்று வீடுகளில் விஷேசங்கள் வைத்துள்ளவர்கள் விலையை தினமும் கண்காணித்து வருகின்றனர். இருத்தும் நகை விலை குறைந்த பாடு இல்லை என்பதால், பொதுமக்கள் புலம்பிக்கொண்டே நகை வாங்கி வருகின்றனர். 


நகை விலை உயர்வு இன்னும் உயரவே வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருவதால், செல்வந்தர்கள் நகைகளை வாங்கி சேமிக்க தொடங்கியுள்ளனர். அதனால், நகைக்கடைகளில் கூட்டம் தற்பொழுதும் ஓரளவிற்கு வருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6725 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.160 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,800 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7336 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58688 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. 


வெள்ளி விலை...


என்ன ஒரு அதிசயம் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய  விலையை விட இன்று  0.50 காசுகள் குறைந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 88.50 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 708 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.88,500 க்கு விற்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்