சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் நகை பிரியர்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை நாட்கள் வருவதினால் தங்கம் விலை சற்று உயர்ந்தே உள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குபவர்களை கலக்கத்தில் ஆழ்த்தினாலும், நகையின் தேவை இருப்பதினால் நகை வாங்கி வருகின்றனர். பண்டிகை காலம், முகூர்த்தம் வருவதால் நகை வாங்க நகை கடையில் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல், நகையில் முதலீடு ஆகியவற்றின் காரணத்தினால் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விலை உயர்வு பண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5840 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 160 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46720 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.50,968 ஆக உள்ளது.
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 0.30 காசுகள் அதிகரித்து ரூபாய் 79.50 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 636 காசாக உள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}