தங்கம் விலை.. மீண்டும் வேலையை காட்ட ஆரம்பிச்சுருச்சு பாருங்க.. சவரனுக்கு ரூ.560 உயர்வு!

May 16, 2024,06:00 PM IST

சென்னை: தங்கம் விலை  நேற்றைய உயர்வைத் தொடர்ந்து இன்றும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் மீண்டும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய உச்சம் பெற்று வாடிக்கையாளர்களை கலக்கம் அடைய செய்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக இறக்கத்தில் இருந்த தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் உயர்ந்துள்ளது. 


இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. இன்றைய விலையை பார்த்த மக்கள் நகை தன் வேலையை மீண்டும் காண்பிக்க ஆரம்பித்து விட்டது. இனி எந்த உச்சத்தை தொடப்போகிறதோ என்று புலம்ப ஆரம்பித்து விட்டனர். 


இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,795 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 70 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.560 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,360 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,413 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,304 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 ஆக உள்ளது.


இன்றைய வெள்ளி விலை...


தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ரூ.1.50 காசுகள் உயர்ந்து ரூ.92.50 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 740 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை  நேற்ற ரூ.91,000 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 92,500க்கு விற்கப்படுகிறது.


தங்கம் விலை உயர  காரணம்...


சர்வதேச பொருளாதார சூழல்,டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  ஆகியவற்றின்  அடிப்படையில் நாள்தோறும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக திடீரென  உயர்வதும் , குறைவதுமாக இருந்து வருகிறது. மேலும், இந்தியா மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்களும் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவதினால் தான் நகை விலை ஏற்றம் கண்டு வருவதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


சீனா மற்றும் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கி குவித்து வருவதால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது.மத்திய அரசு தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனை குறைந்த பாடில்லை.குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தைத தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை விடுத்து தற்போது அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்