ஆடி பிறந்ததும்.. தங்கம் விலை அதிரடியாக உயர்வு.. ஒரு சவரன் விலை ரூ. 55 ஆயிரத்தை கடந்தது!

Jul 17, 2024,12:00 PM IST

சென்னை:   சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.55,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்துடன் சேர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.100ஐ தாண்டியுள்ளது.


தமிழக மக்கள் சேமிப்புகளில் ஒன்றாகிய தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. இன்று ஆடி மாதப்பிறப்பு என்பதால் தங்கம் விலை குறையும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று சட்டென்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


இருப்பினும் இன்று உயர்ந்த தங்கம் மீண்டும் குறைய வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று ஒரு கிராம் ரூ.45 உயர்ந்திருந்த தங்கம், இன்று 90 ரூபாய் உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,920 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 90 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.720 ஆக உள்ளது.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,360 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.69,200 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,92,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,549 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.60,392 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.75,490 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,54,900க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 6,875க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,500க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,890க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,515க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,875க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,500க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,875க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,500க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


சென்னையில் வெள்ளியின் விலையில் நேற்று கிராமிற்கு 0.20 காசுகள் குறைந்து  ரூ.99.50க்கு விற்கப்பட்டது. ஆனால், இன்றே வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 உயர்ந்து, ரூ.100.50 ஆக விற்கப்படுகிறது.தங்கத்துடன் சேர்ந்து வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 804 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,005 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,050 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,500 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சஞ்சு சாம்சனை பேசாம கேப்டனாக்குங்கப்பா.. செமயா சூப்பரா இருக்கும்.. சொல்கிறார் ஸ்ரீகாந்த்!

news

நான் பிடிவாதக்காரன் கிடையாது...பதவி மீது ஆசை எதுவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

மோடியால் முடியாததை நான் சாதித்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல்: முதல்வர் முக ஸ்டாலின்

news

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி.. ஒரு புகாரும் வரவில்லை.. தேர்தல் ஆணையம்

news

தமிழ் வளர்ச்சியில் பெண் கவிஞர்களின் பங்கு!

news

ஹலோ மக்களே.. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க!

news

திருவண்ணாமலைக்கு திடீரென போன லோகேஷ் கனகராஜ்.. கூலி வெற்றிக்காக பிரார்த்தனை!

news

32வது பிறந்த நாளை கொண்டாடும் ஹன்சிகா மோத்வானி.. போராட்டங்களே வாழ்க்கை!

news

புதிய வருமான வரி மசோதா 2025.. திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது

அதிகம் பார்க்கும் செய்திகள்