நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்தது

May 11, 2024,11:35 AM IST
சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. அட்சய திருதியை முன்னிட்டு நேற்று மட்டும் தங்கம் விலை 3 முறை உயர்த்தபட்டது. இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் அதிகமானவர்கள் நேற்று தங்கத்தை வாங்கி குவித்தனர். 

தங்கம் விலை ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே மாறும். ஒரு நேரம் குறையும், ஒரு நேரம் கூடும் இது தான் தங்கம் விலையில் நிகழும் மாற்றம். ஆனால் அட்சய திருதியான நேற்று மட்டும் காலையிலேயே 2 முறை உயர்ந்தது. ஒரு முறைக்கு ரூ.360 என இரண்டு முறை என ரூ.720 உயர்ந்தது. இந்த நிலையில் இனி மாற்றம் இருக்காது 2 முறை மாறிவிட்டது என்று வாடிக்கையாளர்கள் நினைத்தனர். இந்த நிலை மீண்டும் மாறி மாலையில் ரூ.520 மீண்டும் உயர்ந்தது.

நேற்று ஒரு நாளில் மட்டும் தங்கம் 3 முறை உயர்ந்து காணப்பட்டது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் அட்சய திருதி என்பதால் நகை கடைகளில் கூட்டம் இரவு 10 மணி வரை இருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகைக் கடைகளில் பரவலாக கூட்டம் அதிகமாகவே இருந்தது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. 

சென்னையில் இன்றைய தங்கம் விலை...



இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,750 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.160 ஆக உள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,000 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,364 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,912 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. 

சென்னையில் வெள்ளி விலை...

இன்றைய வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.இன்று 1 கிராம் வெள்ளி விலை  0.70 காசுகள் குறைந்து ரூ.90.50 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 724 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை  ரூ.90,500 க்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்