சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. இன்று சவரனுக்கு ரூ.180 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் நகைப்பிரியர்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாமானியர்களை இந்த நகை விலை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே நகை விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது தங்கம். எந்த விஷேசம் என்றாலும் சிறிதளவாவது நகையின் பயன்பாடு இருந்து வருகிறது. இது சங்க காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை நடைமுறையில் இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட நகை சமீபகாலத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இது நடுத்தர மக்கள் மற்றும் சாமானி மக்களை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது.
நகை விலை ஒரு நாள் ஏற்றம், ஒரு நாள் இறக்கம் என்று இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் நகை விலை உயரத்தான் செய்து வருகிறது. நகை விலை குறைவு என்பது ஒரு கண் துடைப்பு போலவே இருந்து வருகிறது. இந்த நகை விலை உயர்வால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் காலத்தில் தாலிக்கு தங்கம் வாங்குவது என்பதும் குதிரை கொம்பாக மாறும் நிலைக்கு வந்துள்ளது.
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6205 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.180 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 49,640 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6769 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.54152 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.180 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.196 உயர்ந்துள்ளது.
தங்கம் மட்டுமா உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் உயர்ந்தே தான் உள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று 0.30 காசுகள் உயர்ந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 80.80 காசுகளாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 646.40 ஆக உள்ளது.
தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத்தொடங்கியுள்ளனர். தங்கத்தின் தேவை அதிகரிப்பதன் காரணமாக, விலை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல், நகையில் முதலீடு ஆகியவற்றின் காரணத்தாலும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}