சென்னை: புதிய உச்சத்தை நேற்று தொட்ட தங்கம் இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை ஒரு கிராம் ரூ.40 குறைந்து, சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்திருந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுவதால் தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்ந்தும், மற்றொரு நாள் குறைந்தும் காணப்படுகிறது. இருப்பினும், வைகாசி மாதம் திருமணங்கள் அதிகளவில் நடைபெறும் என்பதால், இந்த விலை குறைவு விஷேசங்கள் வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,860 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 40 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.320 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,880 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,484 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,872 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
நேற்று உயர்ந்திருந்த வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.99க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 792 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 இருந்த விலை இன்று ரூ.99,000க்கு விற்கப்படுகிறது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}