அச்சச்சோ.. தங்கம் விலை இப்படி ஏறிருச்சே.. சவரனுக்கு ரூ.344 உயர்வு!

Oct 12, 2023,01:00 PM IST

சென்னை : கடந்த ஒரு மாதமாக இறங்கிக் கொண்டிருந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத் துவங்கி உள்ளது. 


இன்று கிராமிற்கு ரூ.43 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5415 க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூபாய்  344 உயர்ந்துள்ளது.  தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.




தங்கம் விலை செப்டம்பர் மாதத்தில் சரிவுடனேயே காணப்பட்டது. அக்டோபர் மாத ஆரம்பத்திலும் குறைந்தே இருந்தது.  இந்த நிலை இன்று  மாறி சற்று உயரத் தொடங்கி உள்ளது. இந்த விலையேற்றம் வாடிக்கையாளர்களை சிறிது கவலையில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை கால, திருமண சீசன் துவங்க உள்ள நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.  


இன்றைய தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5415 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 43 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 43320 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5907 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 47 ரூபாய் அதிகமாகும். 


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும்  உயர்ந்தே உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.72.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 580.80 காசாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்