ஆ...! என்னே ஒரு அதிசயம்... தங்கம் விலை இன்று குறைவு!

Oct 30, 2023,12:20 PM IST

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 288 இன்று குறைந்துள்ளது. 


கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக தங்கம் விலை ஏற்றத்திலேயே இருந்த நிலையில் தற்பொழுது குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஏனெனில், தீபாவளி, முகூர்த்த நாட்கள் என வருவதால் நகை விலை உயரும் என்று எண்ணி இருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை குறைவு மகிழ்ச்சியை தந்துள்ளது. அப்பாடா இன்று  குறைந்துள்ளது என்று பெருமூச்சு விடலாம். அதுவும் சவரனுக்கு ரூ.288 குறைந்துள்ளது.




புலம்பிக் கொண்டே நகை வாங்கிய நடுத்தர விஷேசம் வைத்துள்ள மக்கள் இன்று புலம்பாமல் நகை வாங்கலாம். ஒகே  இன்றைய விலை நிலவரத்தை பார்த்துட்டு கிளம்பலாமா....  இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5735 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 36 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45880 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6256 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 40 ரூபாய் குறைவாகும்.  8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.50048 ஆக உள்ளது.


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 1 ரூபாய்  அதிகரித்து ரூபாய்  75.60 காசாக  உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 604.80 காசாக உள்ளது. சர்வதேச பங்குச்சந்தைகளில் மந்தமான போக்கு நிலவி வருவதால் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து  வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்