தங்கம்.. மீண்டும் மீண்டுமா.. ஹலோ மக்களே இன்னிக்கு சவரன் விலை என்ன தெரியுமா?

Apr 16, 2024,12:06 PM IST
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக  ஏறுமுகமாகவே இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ரூபாய் 640 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களுக்கு பிடித்தமான ஒன்று தங்க நகைகள் தான். அதிலும் தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு நகைகளின் மீது மோகம் அதிகம். அந்த வகையில் சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் பெண்கள் மிகவும் கவலையாக கன்னத்தில் கையை வைத்து வருகின்றனர். 

லோக்சபா தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே தங்கத்தின் விலை உச்சவரம்பை எட்டி ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனால் நகை பிரியர்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 



இந்தியாவில் ருபாயின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் தங்கத்தின் விலை அதிகரிப்பதாக வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இனியாவது தங்கத்தின் விலை குறையுமா என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமிற்கு ரூபாய் 80 வீதம் ஒரு சவரனுக்கு ரூபாய் 640 உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை - ஒரு கிராம் 6,870, ஒரு சவரன் ரூபாய்  54, 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை  ஒரு கிராமிற்கு ரூபாய் 88 வீதம் ஒரு சவரனுக்கு 704 ரூபாய் உயர்ந்துள்ளது . 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 7,495 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 59,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு  1 ரூபாய் உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 90.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய் 90,500 க்கு விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்