சென்னை: தங்கம் விலை சவரனுக்கு இன்று மட்டும் ரூ.320 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மட்டும் இல்லங்க வெள்ளி விலையும் இன்று கிராமிற்கு ரூ.2.50 காசுகள் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. கடந்த மே மாதம் 30ம் தேதி தங்கம் விலை குறையத் தொடங்கியது. அன்று முதல் ஜூன் 3ம் தேதி வரை குறைந்திருந்த தங்கம், அதன் பின்னர் ஏற்ற இறக்கதகதுடனே காணப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றும் இன்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தங்கத்தை பொறுத்த வரை என்று குறையும் என்று உயரும் என்று கணிக்க முடியாத நிலையில், இருந்து வருகிறது. கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நிலை காரணமாக இந்த விலை காணப்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய தங்கம் விலை...

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,840 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 40 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.320 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,720 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,462 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,696 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 ஆக உள்ளது.
இன்றைய வெள்ளி விலை...
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ரூ.2.50 காசுகள் உயர்ந்து ரூ.100.50 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 804 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.98,000 விற்கப்பட்டது இன்று ரூ.1,00,500 விற்கப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}