சென்னை: குட் பேட் அக்லி படத்தில் அஜித் சார் ஒரு பாட்டில் பயங்கரமாக நடனம் ஆடியுள்ளார் என இயக்குனர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்களிடையே பரபரப்பான எதிர்பார்ப்பு பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் நடிகர் அஜித் குமாரின் 63வது படமான குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி புகழ் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தை மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம்தான் புஷ்பா படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் மூன்று தோற்றத்துடன் காட்சியளிப்பது போல் இந்த பஸ்ட் லுக் போஸ்டர் இருந்தது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஒருவேளை அஜித் இப்படத்தில் மூன்று வருடங்களில் நடிக்கிறாரோ என்ற விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. காரணம் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் இரட்டை வேடம், மூன்று வேடம்தான் அதிகமாக இருக்கும்.
மேலும் இப்படத்தில் நடிக்கும் சக நடிகர்களை பற்றி தகவல்களை இதுவரை பட குழுவினர் வெளியிடவில்லை. ஆனால் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் குறித்து இசை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறுகையில், குட் பேட் அக்லி-யில் ஒரு பாட்டு பண்ணி இருக்கோம். அதில் அஜித் சார் பயங்கரமாக நடனம் ஆடி உள்ளார். நான் பார்த்து வியந்துட்டேன் என கூறியுள்ளார். அடடா, தல எப்படி ஆடியிருக்கிறாரோ என்னவோ என்று ரசிகர்களும் இப்போது செம எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}