சென்னை: அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம், கடந்த இரண்டு வாரங்களில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ரூபாய் 172.3 கோடி வசூலை வாரி குவிக்குள்ளது என அப்பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் திரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ் சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. அதிலும் இப்படத்தின் இடைஇடையே வரும் அஜித் குறித்த ப்ரோமோஷன் காட்சிகள் அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் அமைந்துள்ள 90ஸ் பாடல்கள் இப்படத்திற்கு மேலும் மெருகூட்டி உள்ளது. குறிப்பாக இப்படத்தில் வரும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் இப்போதும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்து உலா வருகிறது.
அதே சமயத்தில் இன்றைய காலகட்டத்தில் முகம் சுளிக்கும் வகையில் மது, போதை ஆகியவற்றை மையமாகக் கொண்டு படங்கள் வெளியாகின்றன. இது இன்றைய இளைஞர்களின் மனதை சீர்குலைப்பதாக கருத்துக்கள் எழுந்து வருகிறது. ஆனால் இப்படமோ மது போதை உள்ளிட்டவைகளை தவிர்த்து உருவாகியுள்ளதால் ரசிகர்களிடையே ஆதரவு எழுந்துள்ளது.
இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இரண்டு வாரம் ஆகி உள்ள நிலையில், தியேட்டர்களில் வெற்றி நடை போட்டு வருகிறது. கடந்த 14 நாட்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், உலகளவில் ரூ. 248 கோடி வசூல் செய்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான இரண்டே வாரங்களில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ₹ 172.3 கோடி வசூலில் சாதனை படைத்துள்ளதாக அப்பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் குட் பேட் அக்லியின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் அஜித் யாருடைய படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கும்மிருட்டில் மூழ்கிய சென்னை.. பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கன மழையால் மக்கள் ஹேப்பி!
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. பாக். தாக்குதலுக்கு பதறி துடித்தவர்கள் கள்ள அமைதி ஏன்?.. சீமான்
தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து.. கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டம்.. டாக்டர் ராமதாஸ்
2 மாதங்களில் 5 தற்கொலை.. எப்போதுதான் ஒழியும்.. உயிர்க்கொல்லி நீட் தேர்வு?.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
High BP: உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க தக்காளி கை கொடுக்கும்.. எப்படி தெரியுமா?
Liver health: உங்கள் கல்லீரலை பாதிக்கும் மூன்று உணவுகள்.. இதை தவிருங்கள் மக்களே!
ராஜஸ்தான் எல்லைப் பகுதி வழியாக.. இந்தியாவுக்குள் ஊடுறுவிய.. பாகிஸ்தான் ரேஞ்சர் அதிரடி கைது
பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி
நாளை அக்னி நட்சத்திரம் 2025 ஆரம்பம்...கத்திரி வெயில் தோன்றிய கதை தெரியுமா?