சென்னை: இயேசுநாதர் உயிர் நீத்த தினத்தை புனித வெள்ளியாக அனுஷ்டித்தும், மீண்டும் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் சன்டேவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
புனித வெள்ளி சந்திர நாட்காட்டியின் படி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான புனித வெள்ளி மார்ச் 29ஆம் தேதி இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்த நாளை மகிழ்ச்சியான நாள் என்று நினைக்கின்றனர். ஏனென்றால், அதில் புனிதம் என்ற வார்த்தை உள்ளதால் தான். ஆனால், இது ஒரு துக்க நாள். இயேசுநாதர் உயிர் நீத்த தினம் என்பதால் இதனை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கருதுகின்றனர்.

புனித வெள்ளி நாளில் கத்தோலிக்கர்கள் இறைச்சி சாப்பிடமாட்டார்கள். விரதம் இருப்பார்கள். தங்கள் பாவங்களை நீக்குவதற்காக இயேசு கிறிஸ்து தன்னை சிலுவையில் அறைந்து கொண்டு உயிர் நீத்ததாகவும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கருதுகிறார்கள். ஏசு உயிர் நீத்ததாக கூறப்படும் வெள்ளி புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. தாங்கள் செய்த பாவங்களுக்காக சிலுவை சுமந்து இயேசு நாதர் பட்ட பாடுகளை காண முடியாத மக்கள் இனி பாவங்களை செய்யப் போவதில்லை என இந்த புனித வெள்ளியில் ஒரு உறுதி ஏற்றுக் கொண்டதாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்நாளில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதையும், ஒரு நாள் முழுக்க உண்ணா நோன்பிருப்பதையும், குறிக்கும் ஒரு சந்தி சுத்த போசனத்தை கடைபிடிக்க விரும்புவதாக கூறுகிறார்கள். இயேசு உயிர் நீத்ததாக கருதப்படும் நாளில் இருந்து மூன்றாம் நாள் ஈஸ்டர் தினம் கொண்டாடப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை என்று கூறப்படுகிறது. மீண்டும் இயேசு ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்தார் என்பது நம்பிக்கை.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}