"தத்தம் தளாங்கு தத்தோம்".. இடியுடன் விட்டு வெளுத்த மழை.. மிரண்டது சென்னை!

Aug 10, 2023,03:31 PM IST
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை இன்று மாலை அடித்து நொறுக்கி மழை பெய்தது. இடியுடன் கூடிய இந்த மழையால் சென்னையின் வெப்பம் சற்றே தணிந்தது. 

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வெயில் வெளுத்தபடி இருக்கிறது. இது 2வது கோடை காலமா என்று சந்தேகப்படும் அளவுக்கு வெயில் வறுத்தெடுத்தது. இரவில் தூங்கவே முடியவில்லை, புழுக்கம் அதிகமாகவே இருந்தது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.குறிப்பாக மதுரை
உள்ளிட்ட பகுதிகளில் மழை காணப்பட்டது. இன்று தமிழ்நாட்டின் வட பகுதிகளில் மழை காணப்பட்டது. குறிப்பாக சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று மாலை மழை வெளுத்தெடுத்தது.

குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் கிட்டத்தட்ட  அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. தாம்பரம், படூர், கேளம்பாக்கம், சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பிரித்து மேய்ந்து விட்டது.

மிகப் பெரிய அளவில் திரண்ட கரு மேகங்களுடன் மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயிலின் வெப்பம் குறைந்தாலும் கூட புழுக்கம் போகவில்லை. மழை நின்று வெகு நேரம் பெய்தால்தான் புழுக்கத்திற்கு விடை கிடைக்கும். இல்லாவிட்டால் சிக்கல்தான்.



தற்போது புறநகர்களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் மெல்ல மெல்ல நகருக்குள்ளும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

இன்று தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேனும் கூறியுள்ளதால் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்