செமத்தியான மழை காத்திருக்கு.. குடையோடு ரெடியாகுங்க.. வெதர்மேன் தகவல்!

Aug 29, 2023,05:49 PM IST
சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த ஒரு வாரத்திற்கு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் கொடுமை சற்று தணிந்து அவ்வப்போது குளுமையை அனுபவிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கிறது.

இந்த நிலையில் ஒரு ஹேப்பி நியூஸ் கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் நல்ல மழைக்கான வாய்ப்பு கூடி வந்துள்ளது.  இடியுடன் கூடிய கன மழையையும் எதிர்பார்க்கலாம்.

கரூர், திருப்பூர், கோவை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கூட நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில் 100 மில்லி மீட்டர் மழைக்கும் வாய்ப்பிருக்கிறது.

அடுத்த வாரம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னைக்கும் மழை உண்டு. பாளையம்கோட்டைதான் கடந்த ஒரு மாதமாக வெப்ப பூமியாக திகழ்ந்து வந்தது. அங்கு அடுத்த சில நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பம் குறையும்.

சென்னையில் ராத்திரி நேரத்து டமால் டுமீல் மழை தொடர வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த அளவுக்கு மழை பெய்திருப்பது ஒரு சாதனைதான். சென்னையில் தென் மேற்குப் பருவ மழை பற்றாக்குறையைத்தான் விட்டுச் சென்றுள்ளது. அதை தற்போதைய மழை ஈடு கட்டி வருகிறது என்று கூறியுள்ளார் வெதர்மேன்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்