சென்னை: நாகப்பட்டனம் முதல் சென்னை வரை கடலோரத்தில் மிக சிறப்பான மழை பெய்யவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் நல்ல செய்தியைக் கூறியுள்ளார்.
இன்று இரவு தொடங்கி 15ம் தேதி வரை சிறப்பான மழை காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வட கிழக்குப் பருவமழையில் இதுவரை சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெரிய அளவிலான ஸ்பெல் எதுவும் இல்லை. அதேசமயம், தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் ஓரளவு நல்ல மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் வட கடலோர மாவட்டங்களில் நிலவும் பற்றாக்குறையை இப்போது பெய்யப் போகும் மழை தீர்த்து வைத்து விடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில், 13ம் தேதி இரவு முதல்வர் நவம்பர் 15ம் தேதி வரை நல்ல மழை பெய்யப் போகிறது. நாகை முதல் சென்னை வரை மழை வச்சு செய்யப் போகுது. நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, சென்னை மாவட்டங்களில் இதுவரை இருந்த பற்றாக்குறை மழை முடிவுக்கு வரப் போகிறது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் இந்தப் பகுதிகளில் கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளது. காரைக்கால், நாகை இடையே ஏற்கனவே மழை தொடங்கி விட்டது என்று கூறியுள்ளார் வெதர்மேன்.
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
{{comments.comment}}