நாமதாங்க காலங்கார்த்தாலேயே கூகுளைத் தேடறோம்.. சிஇஓ சுந்தர் பிச்சை என்ன பண்றார் பாருங்க!

Feb 10, 2024,06:46 PM IST

கலிபோர்னியா: காலையில் எழுந்தும் எழாமலும் எல்லோரும் பார்ப்பது கூகுளைத்தான். ஏதாவது தேடுவார்கள் அல்லது வாட்ஸ் ஆப், பேஸ்புக் பார்ப்பார்கள். ஆனால் கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர்பிச்சை, மைக்ராச்ப்ட் தலைமை செயலதிகாரி சத்யம் நாடெல்லா, பேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜக்கர்பர்க் ஆகியோரெல்லாம் என்ன செய்வார்கள் தெரியுமா..?


காலையில் எழுந்ததுமே காலைக் கடன்களை முடிக்கிறோமோ இல்லையோ.. கையில் செல்போன் இல்லாவிட்டால் வேலையை ஓடாது பலருக்கும்.. அதிலும் பலருக்கு கையில் செல்போன் இருந்தால்தான் காலைக் கடன் சுமூகமாக "கழியும்"!


பெரும்பாலானவர்களும் செல்போனுக்கும், சமூக வலைதளங்களுக்கும் கிட்டத்தட்ட அடிமையாகி விட்டோம். எழுந்ததுமே வாட்ஸ் ஆப் பார்க்காவிட்டால், ஏதாவது ரீல்ஸ் பார்க்காவிட்டால், பேஸ்புக் பார்க்காவிட்டால், யூடியூப் பார்க்காவிட்டால் அன்றைய பொழுதே சரியாக ஆரம்பிக்காது.




இதில் யாருமே இதற்கு விதி விலக்கில்லை. ஆனால் கூகுள் தலைமை செயலதிகாரியும், மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரியும், பேஸ்புக் உரிமையாளரும் காலையில் எழுந்ததும் என்ன செய்கிறார்கள் தெரியுமா.. அவர்களது தளங்களுக்குப் போவதே இல்லையாம் இவர்கள்.. மாறாக  https://techmeme.com/ என்ற இணையதளத்திற்குத்தான் இவர்கள் முதலில் போகிறார்களாம். அதைப் போய் ஒரு ரவுண்டு அடித்து விட்டுத்தான் தங்களது வேலைக்குப் போகிறார்களாம் இந்த "தலைவர்கள்".


அப்படி என்ன இருக்கிறது இந்த தளத்தில்...!


நிறைய இருக்கிறது. லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் குறித்த, வேலைவாய்ப்புகள், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் என ஏகப்பட்ட அப்டேட்ஸ்ஸை இந்த தளம் உடனுக்குடன் வெளியிடுவதால் ஏகப்பட்ட வாசகர்கள் இந்த தளத்துக்கு உள்ளனர். ஐடி துறையில் உள்ளவர்களிடையே இந்த தளம் மிகப் பிரபலமானது.




2005ம் ஆண்டு கேப் ரிவெரா என்பதால் உருவாக்கப்பட்ட தளம்தான் இது. கூகுள் போல செய்தி கியூரேஷன் தளமாகத்தான் இது ஆரம்பிக்கப்பட்டது. தொழில்நுட்பம் குறித்து அதிகமாக கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த தளத்தைத்தான் நாடெல்லாம், மார்க் ஜக்கர்பர்க்கும், சுந்தர் பிச்சையும் பார்த்து லேட்டஸ்டாக என்ன நடக்கிறது  என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். நாம தான் "ரீல்ஸ்" பார்த்து என்டர்டெய்ன்மென்ட்டாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்!

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்