சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வில் கலந்து கொள்வதற்கு, மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. அப்போதிலிருந்து அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகளில் பேராசிரியருக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டு தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அரசு கல்லூரிகளில் பணியமர்த்தபடுவார்கள். இதுவரை அரசு சார்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றில் உதவி பேராசிரியருக்கான பணியிடங்கள் 4000 வரை நிரப்பப்படாமல் உள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 569 உதவி பேராசிரியர், 656 ஆங்கில உதவி பேராசிரியர் உட்பட 4000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த 4000 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், முதுகலை பட்டத்தில் குறைந்தது 55 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். செட் அல்லது நெட் தேர்வில் ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}