கடையநல்லூர்: அரசு பேருந்தின் அச்சு முறிந்து பின் பக்க சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியது. இதனால் பேருந்து தரையில் மோதியதில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
மதுரை டூ குற்றாலம் இடையே அரசுப் பேருந்து, தென்காசி கடைநல்லூர் அருகே இடைகால் என்ற பகுதியில் விபத்துக்குள்ளாகியது. இந்த பேருந்தை சங்கரன் என்ற 55 வயதுடையவர் ஓட்டிவந்துள்ளார். இந்த பேருந்து மதுரை டூ குற்றாலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீர் என பேருந்தின் அச்சு முறிந்து இரண்டு சக்கரங்கள் மட்டும் தனியாக சாலையில் ஓடியது.

இதனால், பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது தரையில் மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்ய அனைவரும் பேருந்தின் உள்ளேயே தூக்கி வீசப்பட்டனர். இதில், பேருந்தில் பின்னால் அமர்ந்திருந்த 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேருந்தில் உள்ள பயணிகளை மீட்டு மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். மேலும், பலத்த காயங்களுடன் இருந்த 3 மாணவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்தின் சக்கரங்கள் தனியாக ஓடியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}