சென்னை: சென்னையின் முக்கிய பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கான பஸ் கட்டணத்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை சாலைப் போக்குவரத்து சமீப நாட்களாக சில முக்கிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. இதுநாள் வரை முக்கியப் பேருந்து நிலையமாக இருந்து வந்த கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையமானது, கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதால், கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டின் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
அதி நவீன வசதிகளுடன் கூடிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அத்தோடு வட சென்னை பகுதி மக்களின் வசதிக்காக மாதவரத்திலிருந்தும் தென் மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சென்னையின் முக்கியப் பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு:
மாதவரம் டூ கிளாம்பாக்கம் - ரூ. 40
ரெட்டேரி டூ கிளாம்பாக்கம் - ரூ. 35
அம்பத்தூர் டூ கிளாம்பாக்கம் - ரூ. 30
மதுரவாயல் டூ கிளாம்பாக்கம் - ரூ. 25
பெருங்களத்தூர் டூ கிளாம்பாக்கம் ரூ. 10
வழக்கமான பஸ் கட்டணத்துடன் கூடுதலாக இந்த கட்டணம் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உங்களது ஊருக்கான பயணக் கட்டணம் கிளாம்பாக்கத்திலிருந்து ரூ. 150 என்றால், மாதவரத்திலிருந்து நீங்கள் பஸ் ஏறுவதாக இருந்தால் உங்களிடமிருந்து ரூ. 190 பயணக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}