போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி பகுதியில் உள்ள அரசு அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் ரெய்டு வந்தனர். அப்போது லஞ்சப் பணத்தை அதிகாரி ஒருவர் டக்கென வாயில் போட்டு மென்று முழுங்கி விட்டார்.
வாயில் வெத்தலை பாக்கு போடுவது போல அவர் ஆசுவாசமாக கடித்து மென்று பணத்தை விழுங்கியதால் அவரைப் பிடிக்க வந்த போலீஸார் கையைப் பிசைந்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி விட்டது.
அந்த அதிகாரியின் பெயர் கஜேந்திர சிங். இவர் பெரிய அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அவரை கையும் களவுமாக பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். அதன்படி தங்களிடம் புகார் கொடுத்த ஒருவரிடம் ரூ. 5000 பணத்தைக் கொடுத்து அதை கஜேந்திர சிங்கிடம் ஒப்படைக்க கூறினர். அவரும் கொண்டு போய் கொடுத்தார். அப்போது பின்னாடியே வந்த போலீஸார் கஜேந்திர சிங்கை மடக்கிப் பிடிக்க திட்டமிட்டனர்.
திடீரென போலீஸாரைப் பார்த்த கஜேந்திர சிங் அதிர்ச்சி அடைந்தார். ஆனால்அடுத்த விநாடியே சுதாரித்துக் கொண்ட அவர் அப்படியே அந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து வாயில் திணித்தார். வேகம் வேகமாக மெல்ல ஆரம்பித்தார். மடக் மடக்கென அதை கடித்து மென்று அவர் விழுங்கிய வேகத்தைப் பார்த்து கூடியிருந்தோர் அதிர்ச்சியாகி விட்டனர். அவரைத் தடுக்க முயன்றும் முடியவில்லை. மொத்த பணத்தையும் வாயில் வைத்து மென்று விட்டார் கஜேந்திர சிங்.
வாய்க்குள் ரூபாய்த் தாள்களை அதக்கிக் கொண்டு அவர் நின்று நிதானமாக மென்றதைப் பார்த்து அந்த இடமே பரபரப்பாகி விட்டது. மொத்தப் பணத்தையும் மனிதர் மென்று விழுங்கி விட்டார். அவரது உயிருக்கு ஏதாவது ஆபத்தாகி விடப் போகிறதே என்பதால் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், உயிருக்கு ஆபத்தெல்லாம் இல்லை. அவர் நன்றாகவே இருப்பதாக தெரிவித்தனர்.
தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல் விசாரணை நடந்து வருகிறது.
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!
Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!
சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!
Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!
{{comments.comment}}