சென்னை: தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறையாக அரசு அறிவிக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சென்னை போன்ற பெரிய நகரங்களில் வேலை காரணமாக வசித்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாட்களில் தொடர் விடுமுறையின் போது மக்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவர். ஊருக்குப் போகும் போது சில நாட்கள் குடும்பத்தினருடன் செலவழிப்பதை பலரும் விரும்புகிறார்கள்.
குறிப்பாக சென்னையில் வசிக்கும் அரசு ஊழியர்கள் இதுபோன்ற விடுமுறை தினங்களில்தான் ஏதாவது பிளான் செய்ய முடியும். இந்த வருடம் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை வேலை நாட்களில் வராமல் விடுமுறை நாளில் அதாவது நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
நவம்பர் 11ம் தேதி சனிக்கிழமை அரசு விடுமுறைதான். ஞாயிற்றுக்கிழமை தீபாவளி.. இந்த நிலையில் அடுத்த நாள் அதாவது நவம்பர் 13ம் தேதி விடுமுறை கிடைத்தால் சொந்த ஊர்களுக்குச் செல்வோர் சற்று நிதானமாக ஊர் திரும்பி வரலாமே என்று கருதுகிறார்கள்.
சொந்த ஊருக்கு சென்ற மக்கள் தீபாவளி இரவு அன்று தீபாவளி கொண்டாட்டத்தை விட்டு விட்டு கிளம்ப நேரிடும். அப்போதுதான் மறுநாள் பணிக்குச் செல்ல முடியும். இந்த ஹரிபரியான சூழ்நிலையை தவிர்க்க வெளியூர் செல்லும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் நலன் கருதி தீபாவளி மறுநாள் விடுமுறை விட வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இதையடுத்து அந்தக்கோரிக்கையை ஏற்று அரசு தற்போது 13ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டத்தின் போது கடைசி நேரத்தில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த முறை அப்படி இல்லாமல் முன்கூட்டியே அறிவித்தால் நலமாக இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதன்படி தற்போது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் நவம்பர் 18ம் தேதி பணி நாளாக அரசு அறிவித்துள்ளது.
விடுமுறையை அறிவித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை குளிர்வித்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. பிறகென்னப்பா ஜாலியா கொண்டாடுங்க.. அதேபோல 18ம் தேதி மறக்காம வேலைக்கு வந்துருங்க!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}