சென்னை: அடி மட்ட அளவிலான தொண்டர்கள் பாஜகவினருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இல்லை என்று முன்னாள் அதிமுக எம்.பி. கோகுல இந்திரா கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக கடந்த 25ம் தேதி அதிமுக அறிவித்திருந்தது. ஒரு கட்சி கூட்டணியில் சேர்ந்தால் தான் இனிப்பு கொடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால், பாஜக- அதிமுக இரு கட்சிகளும் பிரிந்ததை அதிமுக தொண்டர்கள் தங்கள் எண்ணங்களை பிரதிபளிக்கும் விதமாக கேக்வெட்டியும், வெடிவெடித்தும் உச்சகட்ட சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடினர்.
அந்தளவிற்கு பாஜகவால் அதிமுக தொண்டர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர் போல!
இப்படி இருக்கையில், பல கட்சி தலைவர்கள், எதிர் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலர் பாஜக-அதிமுக கட்சி முறிவை குறித்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், நேற்று காஞ்சிபுரத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பல்வேறு விஷயங்களை உடைத்துப் பேசினார்.
கோகுல இந்திராவின் பேச்சிலிருந்து:
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதை தொண்டர்கள் யாரும் விரும்பவில்லை. அடிமட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து வேலை பார்க்க முடியாத ஒரு சூழ்நிலைதான் இருந்து வந்தது என்பதனையும் அறியலாம். 1956ல் நடந்ததது என்று நடக்காத ஒரு சம்பவத்தைச் சொல்கிறார் அண்ணாமலை. இந்த அரவேக்காட்டுத் தனத்தை நாம் ஏற்க முடியுமா?
நாங்கள் உங்களை இறக்கி வைத்துவிட்டோம். உங்க வழியை நீங்கள் பாருங்கள். எங்க வழியை நாங்கள் பார்க்கிறோம். எங்கள் தொண்டர் பலத்தை இனி தான் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். எங்கள் (சிவகங்கை) மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி எச். ராஜா, கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடியில் போட்டியிட்டார். அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிரிந்திருந்த அதிமுகவை ஒன்று சேர்த்தது நாங்கள் தான். நன்றி கெட்டவர்கள் என்று பேசியிருக்கிறார்.
உண்மையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்தக் கட்சி உடைந்து, பிரிந்து, அக்குவேறு ஆணி வேராக ஆகவேண்டும் என ஆக்கியது நீங்கள். தர்மயுத்தம் நடத்த வேண்டும் எனச் சொல்லி கொடுத்தது நீங்கள். மீண்டும் ஒன்று சேர்ப்பது போல் சேர்க்க வேண்டும் என நினைத்தது நீங்கள். இதையெல்லாம் பேச ஆரம்பித்தால் அது பெரிய கதையாக போய்விடும் என்றார் கோகுல இந்திரா.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}