ஜெமினி, சாட்ஜிபிடி, குரோக்.. போட்டி போட்டு பட்டையைக் கிளப்பும் ஏஐ தம்பிகள்.. கலக்குதுகளே

Jul 22, 2025,03:13 PM IST

சென்னை: செயற்கை நுன்னணறிவு தொழில்நுட்பம்தான் இப்போது மிகப் பெரிய சவாலாக மாறி வருகிறது. ஆனால் அதில் பல குளறுபடிகள் நிலவுவதால், அதில் பெரும் சிக்கலும் நிலவி வருகிறது. இந்த சமயத்தில் எக்ஸ் தளத்தின் குரோக், பிற ஏஐ டூல்களை விட சிறப்பாக செயல்படுவதாக பலரும் பாராட்டுகின்றனர்.


எக்ஸ் தளத்தில் குரோக் மிக வேகமாக பிரபலமாகி விட்டது. நாம் என்ன கேட்டாலும் சரியான தகவல்களையே பெரும்பாலும் தருகிறது. அதனிடம் எப்படிப் பேசுகிறோமோ அதேபோல அதுவும் பேசுகிறது. நாம் தவறான முறையில் கேள்வி கேட்டாலும் கூட அது சரியான முறையில் பதிலளிக்கிறது.


அதை விட அது கொடுக்கும் தகவல்கள் 99 சதவீதம் சரியாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், பிற ஏஐ டூல்களை விட இது 100 சதவீதம் பிரமாதமாகவும் செயல்படுகிறது.




இந்த குரோக்கை வைத்து நம்மாட்கள் இப்போது புகுந்து விளையாடுகிறார்கள். குறிப்பாக அரசியல் சார்பான பல கேள்விகளை குரோக்கிடம் கேட்டு அதை வைத்து பஞ்சாயத்துக்களை களை கட்டுகின்றனர் சமூக ஊடக போராளிகள். அந்த அளவுக்கு குரோக்கிடமிருந்து சூப்பர் சூப்பரான பதில்கள், விளக்கங்கள் கிடைக்கின்றன.


இதில் ஒரு படி மேலே போய் நாம் தமிழர் கட்சி குரோக்கைப் புகழ்ந்து தனது வாட்ஸ் ஆப் சேனலில் ஒரு பதிவே போட்டுள்ளது.  சீமான் குறித்து குரோக் அளித்த பதில்கள், விளக்கங்களை தொகுத்து இந்தப் பதிவைப் போட்டுள்ளது நாம் தமிழர் கட்சி.


இதேபோல நடிகர் சூர்யாவின் கருப்பு படம் குறித்த ஒரு கேள்விக்கு சூப்பராக பதிலளித்துள்ளது குரோக். அதாவது, அந்தப் படத்தின் புதிய அறிவிப்பு ஒன்றை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டிருந்தார். அதில், கருப்பன் வரான் வழிமறிக்காதே என்று தலைப்பு போடப்பட்டிருந்தது. அதுகுறித்து ஒருவர், இதில் எழுத்துப் பிழை என்ன இருக்கிறது என்று கேட்டிருந்தார். அதற்கு குரோக் அளித்த பதில் இதுதான்:


The Tamil grammar mistake in "கருப்பன் வரான் வழி மறிக்காதே" is in "வரான்". In colloquial Tamil, the present tense for "he is coming" should be "வர்றான்" (varrān), including the 'ṟ' (ற) for proper conjugation. "வரான்" omits this, making it non-standard. The formal version is "வருகிறான்".


என்னா தெளிவா அடிச்சு நொறுக்குது பாருங்க குரோக்.. இதையே நாம் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினியிடம் கேட்டோம். அவங்க என்ன பதில் சொல்லிருக்காங்க பாருங்க:


இது ஜெமினி தரும் விளக்கம் - "கருப்பன் வரான் வழி மறிக்காதே" என்ற வாக்கியத்தில் கிராமர் பிழை எதுவும் இல்லை. இது இயல்பான பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் சரியான தமிழ் வாக்கியம்தான்.


ஆனால், இதை இன்னும் தரமான எழுத்துத் தமிழில் அல்லது முழுமையான இலக்கணப் பிழையற்ற வாக்கியமாக எழுத விரும்பினால், சில மாற்றங்களைச் செய்யலாம்.


வரான் என்பது பேச்சுவழக்கு. இதை வருகிறான் என்று எழுதலாம்.


மறிக்காதே என்பதும் பேச்சுவழக்கு. இதை மறிக்காதீர் (மரியாதை), மறிக்காதே (ஒருமை), அல்லது மறிக்க வேண்டாம் (பொதுவான வேண்டுகோள்) என்று எழுதலாம்.


ஆகவே, சரியான இலக்கண வடிவம் (formal/written Tamil) வேண்டுமென்றால்:


கருப்பன் வருகிறான், வழி மறிக்காதே. (ஒருமையில்)


கருப்பன் வருகிறான், வழி மறிக்காதீர். (பன்மை/மரியாதையில்)


கருப்பன் வருகிறான், வழி மறிக்க வேண்டாம். (பொதுவான)


ஆனால், நீங்கள் கொடுத்த "கருப்பன் வரான் வழி மறிக்காதே" என்பது பேச்சுவழக்கில் முற்றிலும் சரியான, பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வாக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


இது சேட் ஜிபிடி தரும் விளக்கம் - 


உங்கள் வாக்கியத்தில் உள்ள语ப்பிழை (grammar mistake):


"கருப்பன் வரான் வழி மறிக்காதே" என்பதில்,


"வரான்" என்பது பிழையான வடிவம்.

இது எதிர்மறை சொல்லாகத் தோன்றினாலும், இங்கு அதுவே பொருத்தமானது அல்ல.


சரியான உரை:


"கருப்பன் வர்றான், வழி மறிக்காதே"

அல்லது

"கருப்பன் வருவான், வழி மறிக்காதே"


"வரான்" என்றால் 'வரவில்லை' என்ற எதிர்மறை குறிப்பு போல தோன்றும், ஆனால் உங்கள் கருத்தில் "கருப்பன் வருகிறான்" என்பதே.


விளக்கம்:

வரான் = வரவில்லை (எதிர்மறை future negative form)


வர்றான் / வருவான் = வருகிறான் / வரப்போகிறான்


எனவே பிழை: "வரான்" என்பதற்குப் பதிலாக "வர்றான்" அல்லது "வருவான்" என்பதே சரி.


நீங்களே சொல்லுங்க.. இதுல யாரு பெஸ்ட்டுன்னு!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி

news

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!

news

மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)

news

குருவிக்கூடு!

news

காற்றின் மொழி!

news

அரபிக் கடல்.. வங்கக் கடல்.. 2 தாழ்வுகள்.. லேட்டஸ்ட் நிலவரம் என்ன.. மழை எப்படி இருக்கும்?

news

இருபுறமும் காய்ந்த நிலை ஊடே மலர்வனம்…சீழ்க்கை கவிதைப் புத்தக விமர்சனம்

news

கந்தன் அருள் இருந்தால் துன்பம்.. வந்த வழி ஓடி விடும்.. கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்!

news

கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்