ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது...எந்தெந்த பொருட்களின் விலை குறையலாம்?

Sep 03, 2025,12:03 PM IST

டில்லி : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டில்லியில் தொடங்கிய உள்ளது. வரி குறைப்பு மற்றும் சீரமைப்பு பற்றி இந்த கூட்டத்தில் பேச உள்ளனர். இந்த 58வது கூட்டம், ஜிஎஸ்டி சட்டத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. பல துறைகளை பாதிக்கும் முக்கியமான சீர்திருத்தங்களை செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.


இந்த கூட்டத்தில் சுமார் 175 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள நான்கு அடுக்கு வரி முறையை மாற்றி, இரண்டு அடுக்கு வரி முறையாக மாற்றவும் ஆலோசனை செய்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களுக்கு 5% வரியும், மற்ற பொருட்களுக்கு 18% வரியும் விதிக்கப்படலாம். ஆடம்பர பொருட்கள் மற்றும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.


டூத் பேஸ்ட், ஷாம்பு, சோப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்கப்படலாம். வெண்ணெய், சீஸ், சாப்பிட தயாராக இருக்கும் சிற்றுண்டிகள் போன்ற உணவு பொருட்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் Hindustan Unilever Ltd. மற்றும் Nestle India Ltd. போன்ற பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். டிவி, ஏசி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தற்போது 28%  ஜிஎஸ்டி வரி உள்ளது. இதை 18% ஆக குறைக்க வாய்ப்புள்ளது. சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியும் 28% இருந்து 18% ஆக குறையலாம்.




வாகன துறையிலும் சில மாற்றங்கள் வரலாம். 1,200 cc வரை எஞ்சின் திறன் கொண்ட சிறிய பெட்ரோல் கார்களுக்கான ஜிஎஸ்டி வரி 28% இருந்து 18% ஆக குறைக்கப்படலாம். ஆனால், 20 லட்சம் முதல் 40 லட்சம் வரை விலை கொண்ட எலக்ட்ரிக் கார்களுக்கான வரி 5% இருந்து 18% ஆக அதிகரிக்கப்படலாம். இதனால் Tata Motors Ltd. மற்றும் Mahindra & Mahindra Ltd. போன்ற நிறுவனங்கள் கலவையான பலன்களை பெறலாம். இரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28% இருந்து 18% ஆக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்க உள்ளது. இது Hero MotoCorp Ltd. போன்ற நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரி விதிமுறைகளை எளிதாக்கவும், வரி விகிதங்களை சீரமைக்கவும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தின் முடிவுகளுக்காக பல துறைகளைச் சேர்ந்தவர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முடிவுகள் இந்தியாவின் ஜிஎஸ்டி முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். "கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் அத்தியாவசிய பொருட்கள் முதல் நுகர்வோர் மின்னணுவியல் வரை சுமார் 175 பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகித குறைப்புக்கான திட்டங்கள் அடங்கும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்