சென்னை: விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் வெளியாக உள்ளது. இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அத்தோடு ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமரன் படத்துக்கும் சேர்த்து அப்டேட் கொடுத்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் தங்கலான்.இந்த படத்தை கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

18ம் நூற்றாண்டில் கேஜிஎப் பின்னணியில் ஒரு தலைவன் எப்படி உருவாகிறான். அந்த தலைவனுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையேயான போராட்டம் எப்படி இருந்தது என்பது தான் படத்தின் கதையாக சொல்லப்படுகிறது. இது தான் படத்தின் உண்மை கதையா என்பது படம் வெளிவந்தால் தான் தெரிய வரும்.
இப்படம் ரீலிஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். அவர் கூறுகையில், தங்கலான் படத்துக்கான பின்னணி இசை பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தின் பின்னணி இசை தனித்துவமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். அதை உங்களுக்குக் கொடுக்க நான் ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
அதற்கு ரசிகர் ஒருவர். தங்கலான் ஓகே,, அமரன் அப்டேட் கொடுங்க என்று கேட்டுள்ளார். அதற்கும் ஜிவி பிரகாஷ் பதிலளித்துள்ளார். அமரன் கண்டிப்பாக சூப்பர் ஸ்பெஷலாக இருக்கும். ரிலீஸ் தேதி தெரிஞ்சா அதுகுறித்து கரெக்டான அப்டேட் தருவோம் என்று கூறியுள்ளார் ஜிவி பிரகாஷ்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்
முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்
எது மக்களாட்சி?
தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
{{comments.comment}}