சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இலங்கை மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சியை மழையை ஒட்டிய பகுதிகளான கிருஷ்ணகிரி ,சேலம் , திருப்பத்தூர் ,மதுரை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் தேனி தர்மபுரி, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தற்போது மூன்று நாட்களுக்கு தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். எனவும் நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில், இன்றுடன் அக்டோபர் மாதம் முடியும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழையின் அளவு 98மி.மீ பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இயல்பு அளவு 121 மி. மீ ஆகும்.
தற்போது வடகிழக்கு பருவமழையானது இயல்பு அளவைவிட 43 சதவீதம் குறைவு. இது 123 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக அக்டோபர் மாதத்தில் குறைவாக பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை எதுவும் இல்லை . சென்னையைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் .நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
மேலும் இந்த வருடம் வடகிழக்கு பருவமழையானது நிலையாக இல்லை. காற்றில் ஈரப்பதம் ஈரப்பதமின்மையால் தற்போது காற்று கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வு நடக்கும் போது இதுபோல மழை விட்டு விட்டு தான் செய்யக்கூடும். நவம்பர் மாதத்திற்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிடப்படும் என சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}