சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மே 14ம் தேதி வரை மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கேடை வெயில் வெளுத்து வாங்கி வந்த நிலையில், நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பொழிந்து வெப்பத்தை தணித்து வருகிறது. இந்த மழை பொழிவால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று முதல் மே 14ம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. தமிழக உள் மாவட்டங்களில் புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 8-11 ) வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும். அதன்படி 2 டிகிரி செல்சியஸ் வரை குறையும். வட தமிழக உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 105 முதல் 109°பாரன்ஹீட் வரையும், இதர மாவட்டங்களில் 102 முதல் 104° பாரன்ஹீட் வரையும், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 96.8 முதல் 100.4 டிகிரி பாரன் ஹீட் வரை இருக்கக்கூடும்.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
08.05.2024: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
09.05.2024: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10.5.2024: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
11.5.2024: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயமுத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகும ரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
12.5.2024: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.5.2024 மற்றும் 14.5.2024: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
Beauty is fascinating.. அழகு மனதை ஈர்க்கும் அதிசயம்!
{{comments.comment}}