மும்பை: நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தாய் வீட்டுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தனது கணவர் சோஹேல் கத்தூரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்துவது போல அவரது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணவருடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும் அவர் நீக்கியுள்ளார்.
கணவர் சோஹேலுடன் எடுத்த திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் நீக்கிவிட்டார் ஹன்சிகா. கிட்டத்தட்ட மூன்று வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இந்தப் பிரிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு டிசம்பரில் இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது நினைவிருக்கலாம்.
திருமணம் முடிந்ததும் ஹன்சிகா, சோஹேலுடன் வாழ்ந்து வந்தார். ஆனால் இப்போது தனது தாயுடன் வசிப்பதற்காக அவர் தனது கணவரைப் பிரிந்து சென்றுவிட்டார். ஹன்சிகா மற்றும் சோஹேலின் காதல் கதை 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் ஒரு ரியாலிட்டி ஷோவாக வெளியானது. இந்த நிகழ்ச்சியில், பாரிஸில் ஈஃபிள் கோபுரத்தின் கீழ் சோஹேல் தன் காதலை வெளிப்படுத்தியது முதல் அவர்களது திருமணம் வரை பல விஷயங்கள் காட்டப்பட்டன.
சோஹேலுக்கு ஏற்கெனவே ரிங்கி பஜாஜ் என்ற பெண்ணுடன் திருமணமாகி இருந்தது. அந்த ரிங்கி பஜாஜ், ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என கூறப்பட்டது. ரிங்கியை பிரிந்த பிறகுதான் ஹன்சிகாவை மணந்தார் சோஹேல். ஆனால், தற்போது இந்த திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டிருப்பதா பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளங்களில் சோஹேல் எந்தப் பதிவும் வெளியிடவில்லை. தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை ‘பிரைவேட்’ ஆக மாற்றியிருக்கிறார்.
திருமண முறிவு செய்திகள் குறித்து ஹன்சிகா மற்றும் சோஹேல் இருவரும் இதுவரை எந்தவித அதிகாரபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் ஹன்சிகா செய்த மாற்றங்களும், சோஹேலின் அமைதியும் இவர்களது பிரிவு குறித்த விவாதங்களை வலுப்படுத்தியுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!
அன்புமணி அறிவித்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் வழக்கு
ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி
உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?
தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?
ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?
{{comments.comment}}