லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் முதல் முறையாக ஹனுமன் சாலீசா பாடப்பட்டது.
பாகேஷ்வர் தாம் பண்டிட் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி தலைமையில் இந்த ஹனுமன் சாலீசா பாடப்பட்டது. இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் ஹனுமன் சாலீசா முதன்முறையாக பாடப்பட்டது ஆகும். பண்டிட் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி முன்னிலையில் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பலர் பக்தி சிரத்தையுடன் அனுமன் சாலீசா பாடினர். பாகேஷ்வர் இதை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்துள்ளார்.

தீரேந்திர சாஸ்திரி காவி உடை அணிந்து மந்திரங்களை சொல்ல, மற்றவர்கள் அவரை பின்பற்றி ஹனுமன் சாலீசா பாடினர். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தீரேந்திர சாஸ்திரியின் சர்வதேச சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைந்தது. அவர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் ஆன்மீக நிகழ்வுகளிலும் சொற்பொழிவுகளிலும் கலந்து கொள்கிறார்.
இங்கிலாந்தில் இந்துக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இந்துக்கள் பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்திய வம்சவாள இந்துவான ரிஷி சுனாக் அந்த நாட்டின் பிரதமராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஹனுமன் சாலீசா பாடப்பட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}