சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணிக்கு இன்று பிறந்த நாள். சமீபத்தில் மறைந்த அவர் குறித்து அவரது சித்தப்பா மகனும், அண்ணனுமான, இயக்குநர் வெங்கட் பிரபு ஹாப்பி பர்த்டே .... ஐ மிஸ் யூ தங்கச்சி என உருக்கமாக டிவீட் போட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த 25ம் தேதி காலமானார். அவருக்கு வயது 47. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர், அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
குயில் போன்ற குரலுக்கு சொந்தக்காரர். ராசய்யா படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். இவர் பாடிய மஸ்தானா மஸ்தானா பாடல் மிகப் பெரிய ஹிட்டாகியது. பலரது இசையில் பின்னணி பாடியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பின்னணி பாடியுள்ளார்.

இளையராஜா இசையில் பாரதி படத்தில் இவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு தேசிய விருதும் பெற்றுள்ளார். ஒரு சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். பவதாரிணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பவதாரிணியின் பிறந்த நாளான இன்று இயக்குனர் வெங்கட் பிரபு உருக்கமான டுவிட் ஒன்றை போட்டுள்ளார். பவதாரிணியுடன் வெங்கட் பிரபு இருக்கும் படத்தை போட்டு, இனிய பிறந்த நாள் தங்கச்சி. நீ மகிழ்ச்சியான இடத்தில் இருப்பாய் என்று நம்புகிறோம்.. ஐ மிஸ் யூ சோ மச் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு நெட்டிசன்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}