வேலூர்: வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கீழே தள்ளிய ஹேமராஜ் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் 4 மாத கர்ப்பிணி பெண். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணி புரிந்து வருகிறார். நேற்று தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக, கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். கர்ப்பிணி பெண் அமர்ந்திருந்த மகளிர் பெட்டியில் யாரும் இல்லாத காரணத்தினால், அங்கிருந்த இளைஞர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர் அந்த பெண்ணை பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

அந்த பெண் கழிவறைக்குச் செல்லும் போதும் தொடர்ந்து தொந்தரவு செய்த நிலையில், கர்ப்பிணி பெண் கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த நபர் கர்ப்பிணி பெண்ணை கே.வி.குப்பம் அருகே ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அந்த பெண்ணின் கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. வலி தாங்காமல் அலறியதால், அப்பகுதி மக்கள், அந்த பெண்ணை மீட்டு உடனடியாக கே.வி.குப்பம் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணிற்கு கே.வி.குப்பம் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார்.
கே.வி.குப்பம் பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரயில்வே குற்றப்பதிவேட்டில் இருந்த புகைப்படங்களை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் காண்பித்தனர். அதில், ஹேமராஜ் என்பவரை அப்பெண் அடையாளம் காட்டியுள்ளார்.
அந்த பெண் அடையாளம் காண்பித்த ஹேமராஜ் என்பவர் மீது 2022ம் ஆண்டு ரயில் நிலையில்களில் செல்போன் பறிப்பு, ரயில் பயணிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உள்பட பல்வேறு வழக்குகளில் இவர் சம்பந்தப்பட்டிருப்பதும், தற்போது பிணையில் வெளியே இருப்பதும் தெரிவந்தது. இதனையடுத்து, ஹேமராஜை போலீசார் தீவிரமாக தேடி கைது செய்தனர். ஹேமராஜ் மீது பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
{{comments.comment}}