உங்களது அந்தரங்க புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டார்களா?.. 1930க்கு கால் பண்ணுங்க!

Nov 04, 2024,06:09 PM IST

சென்னை: தங்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து யாரேனும் மிரட்டினால் பெண்கள் தைரியமாக 1930 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.


இன்றைய நாகரீக உலகில் இன்டர்நெட், இமெயில் மற்றும் மொபைல் போன்கள் மூலம் ஆபத்துக்கள் அதிகம் வருகின்றன. நவீன நாகரீக இந்தியாவில் தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் நூதன முறையில், பண மோசடி செய்யும் கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. மொபைல் ஆப்பை பயன்படுத்தி தங்களது வங்கி கணக்கில் உள்ள பணங்களை அவர்களுடைய வங்கிகணக்கிற்கு மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 




அது மட்டும் இன்றி ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவர்களது மொபைல் போன்களில் உள்ள தகவல்களை பதிவிறக்கம் செய்து, அந்த படங்களை வைத்து மிரட்டி பணம் சம்பதித்து வருகின்றனர் ஒருசாரர். இந்த மோடி கும்பல்களிடம் சிக்கும் பெண்களிடம் இருந்து தங்களது அந்தரங்க புகைப்படங்களை வைத்து பிளாக்மொயில் செய்து பணம்பறிப்பதுடன், அவர்களை தவறான வழிக்கும் அழைத்து சொல்லும் நூதன முறைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. 


இந்த மோசடி கும்பல்களிடம் சிக்குபவர்கள் தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான பணங்களை இழக்கும் அளவிற்கு போகும் நிலையும் ஏற்படுகிறது. இத்தகைய சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 97 சைபர் கிரைம் குற்றங்கள் நடப்பதாக புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்நிலையில், உங்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து யாரேனும் மிரட்டினால் பெண்கள் தைரியமாக போலீஸில் புகார் அளிக்க அறிவுறுத்தப்படுள்ளனர். உங்களது மெளனத்தால் உங்கள் குற்றவாளி பலனடைகிறார் என்பதை அறிய வேண்டும் என எச்சரித்துள்ள காவல்துறை, 24 மணி நேரமும் இயங்கும் எங்களது உதவி எண் 1930 என்ற எண்ணை உங்களது உதவிக்கு அழைக்கலாம் என்றும் பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


இதேபோல பெண்களுக்கு உதவுவதற்காக 181 என்ற உதவி எண்ணும் உள்ளது. பிரச்சினையில் சிக்கும் பெண்கள் அதையும் பயன்படுத்தலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்