டெல்லி: எச்டி குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், இணைந்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள முக்கியமான 3 கட்சிகளில் ஒன்று மதச்சார்பற்ற ஜனதாதளம். எச்.டி. தேவகவுடா நிறுவிய இக்கட்சியின் தலைவராக இருப்பவர் அவரது மகன் எச்.டி. குமாரசாமி. சமீப காலமாக குமாரசாமிக்கும், பாஜக தலைவர்களுக்கும் இடையே ரகசியமாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கப் போவதாகவும் பேச்சு அடிபட்டது.
இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு கூட முடிவடைந்து விட்டதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் அதை குமாரசாமி மறுத்திருந்தார். இந்த நிலையில் இன்று டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குமாரசாமி சந்தித்தார். முறைப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
வருகிற லோக்சபா தேர்தலை பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து சந்திக்கவுள்ளதாக குமாரசாமி அறிவித்துள்ளார்.
பாஜக - மதச்சார்பற்ற ஜனதாதளம் இடையே கூட்டணி ஏற்படுவது புதிதல்ல. தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே உருவாகி பின்னர் கலையும் கூட்டணி இது. கர்நாடகத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியமைத்தபோது எதியூரப்பாவும், குமாரசாமியும் கூட்டணி அமைத்துத்தான் ஆட்சியைப் பிடித்தனர். அதில் உடன்பாட்டின்படி முதலில் குமாரசாமி முதல்வராக பதவி வகித்தார். பின்னர் எதியூரப்பா வசம் முதல்வர் பதவியைக் கொடுக்காமல் தானே தொடர முடிவு செய்ததால் கோபமடைந்த பாஜக ஆதரவை வாபஸ் பெற குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
அதன் பின்னர் பாஜக தனித்து ஆட்சியைப் பிடித்தது. எதியூரப்பா தென்னிந்தியாவின் முதல் பாஜக முதல்வர் என்ற பெருமையைப் பெற்றார். அதற்கு அடுத்த சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் குமாரசாமியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தனர். குமாரசாமி முதல்வரானார். ஆனால் குறுகிய காலமே இந்த ஆட்சி நீடித்தது. பாஜக உள்ளே புகுந்து ஆபரேஷன் லோட்டஸை களம் இறக்கியது.
இதில் சிக்கி மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கட்சி தாவி பாஜகவில் இணைந்தனர். குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் பாஜக ஆட்சியமைத்தது. அந்த ஆட்சியைத்தான் தற்போது சித்தராமையா - டிகே சிவக்குமார் தலைமையிலான காங்கிரஸ் கட்சி வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பாஜகவுடன் கை கோர்த்துள்ளார் குமாரசாமி. இது எந்த மாதிரியான பலன்களையும், விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது போகப் போகத் தெரியும்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}