The GOAT படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.. மாலை 6 மணிக்கு 3வது சிங்கிள் SPARK

Aug 03, 2024,02:36 PM IST
சென்னை: நடிகர் விஜய்  நடிக்கும் ‘The GOAT' படத்தின் Spark பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் தான் தி கோட். படம் குறித்து மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இப்படத்தை உருவாக்குவதால் படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும். இதற்கு பிறகு விஜய் முழு நேரமும் அரசியலில் செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.



இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  வெங்கட்பிரபு, விஜய் இணையும் முதல் படம் இது. இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். விஜய்யுடன் நடிகை திரிஷாவும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வர உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘The GOAT' படத்தின் Spark பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் புதிய போஸ்டரை தற்பொழுது வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் விஜய்யும், நாயகி மீனாட்சி செளத்ரியும் டான்சிங் போஸில் உள்ளனர். 3வது சிங்கிள் பாட்டுக்கான புரோமோ நேற்று வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்த புதி ஸ்டில் ரசிகர்களை மேலும் பரவசப்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்