டில்லி : மொபைல் போன், லேப்டாப் இவை இரண்டுமே இன்று அனைவரிடமும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது இந்த டிஜிட்டல் யுகத்தில். இவைகள் பல வேலைகளை எளிதாக்குகின்றன, தொலைத் தொடர்புக்கும் இன்றியமையாது என்பது மறுக்க முடியாது.
அதே சமயம் இவற்றின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டும் என மருத்துவ உலகம் நம்மை எச்சரித்துக் கொண்டிருக்கிறது. மொபைல் போன், லேப்டாப்பினால் என்ன பெரிய நோய் வந்து விட போகிறது என நினைத்தீர்கள் என்றால் அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் 5 விதமான எலும்பு பிரச்சினைகள் நமக்கு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல கூடுதல் போனசாக, மஸ்குலோஸ்லிட்டல் எனப்படும் தசைஎலும்புகளின் ஆரோக்கியத்தையும் இவை பாதிப்பதாக சொல்லப்படுகிறது.
லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்துவதால் நம்மையும் அறியாமல் நாம் ஒழுங்கற்ற முறையில் அமருகிறோம். இது பலவிதமா உடல் பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்துகிறது. லேப்டாப் மற்றும் மொபைல் போன் பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் அந்த 5 வகையான எலும்பு நோய்கள் என்னன்னு தெரிந்து கொள்ள வேண்டுமா? வாங்க...
1. மணிக்கட்டுகளில் வலி: தொடர்ந்து மொபைல் போன் மற்றும் லேப்டாப்பில் டைப் செய்தும், பயன்படுத்தும் போதும் நம்முடைய கைகளில் உள்ள மைய நரம்பில் அழுத்தம் ஏற்படுகிறது. இதன் விளைவாக மணிக்கட்டுகளில் வலி, எரிச்சல் ஆகிய உணர்வுகள் ஏற்படும். இத தொடரும் பட்சத்தில் உங்களின் கைகள் மற்றும் விரல்களில் உள்ள எலும்புகள் பலவீனமடைந்து, சாதாரணமாக பயன்படுத்தும் போதும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். இது நரம்பு பாதிப்பு, கைகளை செயலிழக்க செய்வது போன்றவற்றை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
2. கழுத்து வலி: லேப்டாப், மொபைல் போன் பயன்படுத்தும் பலரும் சந்திக்கும், அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரச்சனை கழுத்து வலி. ஒழுங்கற்ற அமைப்பில் நீங்கள் அமர்ந்து, இவற்றை பயன்படுத்தும் போது அழுத்தம் ஏற்பட்டு, வலி ஏற்படுகிறது. இது கழுத்தில் உள்ள தட்டு எலும்புகள், இணைப்பு எலும்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி, கழுத்தில் ஒரு விதமான இறுக்கத்தை ஏற்படுத்தி விடும். கைகள், தோள்பட்டை ஆகியவற்றை பலவீனமடைய செய்து விடும்.
3. முதுகுத் தண்டவடத்தில் பாதிப்பு: நீங்கள் சரியானமுறையில் அமர்வதால் முதுகு தண்டுவடத்தின் வளைவுகள் அசாதாரண மாற்றத்தை சந்திக்கின்றன. இது முதுகின் மேற்பகுதி மற்றும் மையப்பகுதியை பாதித்து, நாளடைவில் உங்களால் கழுத்தை திருப்பி பார்க்க முடியாத நிலை ஏற்படும். தண்டுவடத்தை சுற்றி இருக்கும் தசைகளும் பலவீனமடைய துவங்கி விடும். இதனால் மூச்சு திணறல், முதுகில் இறுக்கமான உணர்வு, முதுகு வலி போன்றவைகள் ஏற்படும்.
4. எலும்பு தேய்மானம்: நம்முடைய வயது, வாழ்க்கை முறை ஆகியவையும் மொபைல் மற்றும் லேப்டாப் பயன்பாட்டுடன் சேர்ந்து கொள்ளும் போது எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். உடற்பயிற்சி இன்மை, தொடர்ந்து அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது ஆகியவற்றால் தண்டுவடம் பாதிக்கும். இதனால் எலும்பின் அடர்த்தியும் பாதிக்கப்படும்.
5. தசைநார்கள் செயலிழக்கும்: ஒரே இடத்தில், அழுத்தம் கொடுத்து அதிக நேரம் அமர்ந்திருப்பதால் கீழ் முதுகு வலி ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பதால், கீழ் பகுதியில் உள்ள தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு தசைநார்கள் மிக விரைவாகவே வலுவிழக்க துவங்கி விடும்.
என்னங்க கேட்டுக்கிட்டீங்களா.. இனிமேலாவது லேப்டாப், மொபைல் பயன்படுத்தும்போது கவனமா இருங்க.. அதுக்கு அப்பப்ப பிரேக் கொடுத்து விட்டு நீங்களும் ரிலாக்ஸ் ஆகுங்க.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ரசிகர்களே.. உங்களது அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.. அஜீத் குமார்நெகிழ்ச்சி!
ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி
இயற்பெயர்களுக்கு திரும்பும் முன்னணி நடிகர்கள்... தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட்.. அப்போ ரஜினி?
தமிழ்நாடு முழுவதும் களை கட்டிய பொங்கல் திருநாள்.. வீடுகள் தோறும் Happy Pongalo Pongal!
சீறிப் பாயும் காளைகள்.. விறுவிறு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. பொங்கல் நாளில் கோலாகலம்!
பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!
மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பொங்கல் வைக்கும் நேரத்தில் நாளை மழை பெய்யுமா.. என்ன சொல்கிறது வானிலை மையம்?
மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
{{comments.comment}}