மே மாத இறுதி வரை வெயிலுக்கு என்டே இல்லை.. 5 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்.. வானிலை மையம்

May 07, 2024,10:50 AM IST

சென்னை: வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் எனவும், தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்கள் வெப்ப அலை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


வெயில் ஆரம்பித்தாலே கோடை காலம் தொடங்கிவிட்டது தான். அதிலும் வெயில் உச்சத்தை தொட்டால் அது அக்னி நட்சத்திர காலகட்டம் தான். ஆனால் தற்போது எதிர் மாறாக அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பிருந்தே வெப்ப அலை கடுமையாக வீசி வருகிறது. இதன் தாக்கம் மே இறுதிவரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. மக்கள் இதனை சமாளிக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்த சூழ்நிலையில் வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச கூடும். அப்போது 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும். இதர மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை  வெயில் கொளுத்தும். மேலும் கடலோர மாவட்டங்களில் 100 டிகிரி வரை வெயில் கொளுத்தும். தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வெப்ப அலை உயர வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமுடன் செயல்பட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.




நேற்று அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 110 டிகிரி வரை வெப்பம் பதிவானது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் சதமடித்ததுள்ளது.


மழை நிலவரம்:


தமிழ்நாட்டின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் மூன்று நாட்கள் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.


இன்று நீலகிரி, தர்மபுரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆகிய ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.


நாளை கோவை,  தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.


சென்னை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய கூடும். தெற்கு மற்றும் வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்