சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்று முதல் ஐந்து நாட்கள் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தலைவலி, தலைசுற்றல் ,சோர்வு அஜீரண கோளாறு, ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வெப்பத்தை மக்கள் சமாளிக்க, குடிநீர் பந்தல் அமைத்தல், ஓஆர்எஸ் கரைசல் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹூட்டையும் தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்:

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் மூன்று நாட்கள் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் வெயில் அளவு 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும் அறிவித்துள்ளது.
இது தவிர தமிழ்நாட்டில் இன்று முதல் ஏழு நாட்கள் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}